Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்தை கவனிக்க முடியல…. தூய்மை பணியாளர்களின் போராட்டம்…. கோவையில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட அலுவலகத்திற்கு சமூகநீதி தூய்மை பணியாளர் சங்கத்தினர் சென்றுள்ளனர். அதன்பிறகு தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, காலை 5.45 மணிக்கு வேலைக்கு வர வேண்டுமென்றால் 4 மணிக்கே எழுந்து புறப்பட வேண்டியுள்ளது. இதனால் குடும்பத்தை கவனிக்க இயலவில்லை.

இந்நிலையில் பணி செய்யும் இடத்தில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தூய்மை பணியாளர்கள் வருவதற்கு போதிய பேருந்து வசதியும் இல்லை. அதன்பின் மற்ற மாவட்டங்களில் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி 605 ரூபாய் வழங்கப்படும் நிலையில், கோவை மாவட்டத்தில் 475 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே வேலைக்கு வரும் நேரத்தை மாற்றுவதோடு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணியாளர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |