Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மோசடி…. உரிமையாளருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கோழி நிறுவன உரிமையாளருக்கு 40 லட்சம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலவஞ்சிபாளையம் பகுதியில் ஏ.ஜி குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீ குபேரன் ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் கடந்த 2011-ஆம் ஆண்டு கோழி நிறுவனம் தொடங்கியுள்ளார். இந்நிலையில் குமார் வி.ஐ.பி திட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 8 ஆயிரம் வீதம் 24 மாதங்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் முதலீட்டு தொகையை 2 ஆண்டுகளில் திருப்பி வழங்கி கோழிக்குஞ்சுகளை நிறுவனமே பராமரிக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இதனை நம்பி 41 பேர் முதலீடு செய்துள்ளனர். இதனையடுத்து 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டு பணத்தை கொடுக்காமல் குமார் மோசடி செய்ததால் ராஜாமணி என்பவர் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி கடந்த 2014-ஆம் ஆண்டு காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கினை விசாரித்த கோவை டன்பெட் நீதிமன்றம் குமாருக்கு 40 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும் அபராத தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். தற்போது தலைமறைவாக இருக்கும் ஏ.ஜி குமாரை பிடிப்பதற்காக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |