வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியின் அருகாமையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கு வசிக்கும் பத்மா என்பவர் வீட்டின் பின்புறம் இருக்கும் புதரில் வைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாராயம் விற்பனை செய்த பத்மாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.