சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அனுமம்பட்டி பகுதியில் வசிக்கும் ஆஞ்சு என்பவர் தனது வீட்டின் பின்புறத்தில் இருக்கும் முட்புதரில் வைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் ஆஞ்சுவை பிடிக்க முயற்சி செய்த போது அவர் தப்பி ஓடியுள்ளார்.
இதனை அறிந்த காவல்துறையினர் அவரை துரத்தி சென்று பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 5 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.