Categories
மாநில செய்திகள்

என்ன ஆச்சு….. பதிலளியுங்க…..”ராபர்ட் பயாஸ் பரோல்”….. நீதிமன்றம் உத்தரவு …!!

ராஜீவ் வழக்கில் ராபர்ட் பயாஸ்_க்கு  30 நாட்கள் பரோல் கோரிய மனு மீது நவம்பர் 4-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயாஸ் தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக 30 நாள் பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது   மகள் தமிழ் கோ நெதர்லாந்தில் வசித்து வருகின்றார். 29 வயதான தன் மகளுக்கு திருமண ஏற்பாடுகளை நடைபெற்று வருகின்றது. இதை கவனிப்பதற்காக தனக்கு பரோல் வேண்டுமென்று சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து வலியுறுத்தினேன்.ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.

எனவே அந்த மனுவை பரிசீலித்து தனக்கு 30 நாட்கள் பரோல் வழங்க அனுமதிக்க வேண்டுமென்றும் , தனது மகனின் திருமண ஏற்பாடுகளை கண்காணிக்க முதல் முறையாக பரோல் கேட்கிறேன் என்று சொல்லப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று சிறைத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய நவம்பர் முதல் வாரம் வரை வழக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து   நவம்பர் 4 ஆம் தேதிக்குள் பதில்  தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |