Categories
உலக செய்திகள்

எங்களுக்கும் சம உரிமை வேண்டும்…. தலிபான்களை பொருட்படுத்தாத பெண்கள்…. தலைநகரில் நடந்த போராட்டம்….!!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் உருவாக்கவிருக்கும் புதிய அரசாங்கத்தில் பெண்களுக்கும் இடமளிக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தானின் தலைநகரிலுள்ள அதிபர் மாளிகையின் முன்பாக பல பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தலைநகர் காபூலிலுள்ள அதிபர் மாளிகைக்கு முன்பாக ஆயுதமேந்திய தலிபான்கள் இருப்பதை கூட பொருட்படுத்தாமல் பல பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் கோரிக்கையாவது, ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் உருவாக்கவிருக்கும் புதிய அரசாங்கத்தில் பெண்களுக்கும் இடமளிக்க வேண்டும் என்பதாகும். மேலும் அவர்கள் பேச்சு சுதந்திரம், கல்வி சமூகம் உட்பட பலவற்றில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சமஉரிமை வழங்க வேண்டும் என்று வாசகம் பொருந்திய அட்டைகளை கையில் ஏந்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

Categories

Tech |