Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

அசுரனை பார்த்த ஸ்டாலின்…… அசந்து போன தனுஷ்….!!

திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை குவித்து வருகிறது. அந்த வகையில் அசுரன் படத்தை பார்த்த சமூக ஆர்வலர்கள் திரைப்பட கலைஞர்கள் அரசியல் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் தங்களது பாராட்டுகளை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில் நேற்று தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு தூத்துக்குடி திரையரங்கு ஒன்றில் அசுரன் திரைப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டு களித்துள்ளார்.

Image result for ஸ்டாலின் தனுஷ்

படம் பார்த்த ஸ்டாலின் அசுரன் படம் அல்ல பாடம் என்றும் பஞ்சமி நில மீட்பு குறித்த விழிப்புணர்வையும் சாதியத்தை களை விதத்திலும் படம் எடுத்ததற்கு படத்தின் இயக்குனர் வெற்றிமாறனுக்கும், சாதியத்தை களை எடுக்கும் வீரனாக நடித்த தனுஷ் அவர்களுக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்து இருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார். அதில், காலத்தை ஒதுக்கி படத்தை பார்த்ததற்கும், பாராட்டுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றும், உங்களது பாராட்டுக்களால்  அசுரன் படக்குழு பெருமகிழ்ச்சி அடைந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |