வயலில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டின் மீது மின்னல் தாக்கியதால் உயிரிழந்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாழைக்குறிச்சி கீழத் தெருவில் சத்தியவாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் கடன் உதவித் தொகை பெற்று பசுமாடுகளை வாங்கி அதை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தா.பழூர் மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் இடியுடன் பலத்த கனமழை பெய்துள்ளது.
இதனை அடுத்து ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் வயலில் சத்தியவானின் மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பசுமாடு மீது மின்னல் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது குறித்து தகவலறிந்து வந்த கால்நடை துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்த பின் பசுமாட்டை அடக்கம் செய்துள்ளனர்.