பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் நிழற்குடையில் முதியவர் ஒருவரின் சடலம் கிடந்தது கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் இருக்கும் நிழற்குடையில் 60 வயது உடைய முதியவர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் ஞானபிரகாசம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரில் வசிப்பவர், எப்படி இருந்திருப்பார் என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.