Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! பொறுப்புகள் கூடும்….! நிதானம் வேண்டும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! எடுத்த முயற்சி கைகூடும்.

இன்று தொட்ட காரியம் வெற்றி பெறுவதற்கு கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டும். தொல்லை கொடுத்தவர்கள் எல்லாம் இப்பொழுது தோள்கொடுத்து உதவிகள் செய்து கொடுப்பார்கள். தொழிலில் வளர்ச்சி ஏற்பட்டு கடன் உதவி கண்டிப்பாக கிடைக்கும். பாதியில் நின்ற பணி மீண்டும் தொடரும். விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் திட்டமிட்டபடி செயல்களை செய்து வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் கூடும் பொது வாழ்க்கையில் புகழ் கூடும். சில காரியங்கள் தடை தாமதம் தொடர்ந்தாலும் நடந்து முடியும். சில விஷயங்களில் அனுசரித்து செல்ல வேண்டும். எடுத்த முயற்சி கைகூடும்.

நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வப்போது ஏற்படக்கூடிய மனக்குழப்பத்தை சரி செய்து கொள்ள வேண்டும். காதலில் குழப்பமான சூழ்நிலை இருக்கும். கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் காதல் கைகூடும். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியில் திறம்பட செயல்பட கூடிய காலகட்டமாக இருக்கின்றது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளஞ்சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 6                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம் சிவப்பு

Categories

Tech |