மீனம் ராசி அன்பர்களே.! இன்பமும் துன்பமும் கலந்து காணப்படும்.
இன்று தொகை கேட்ட இடத்தில் கண்டிப்பாக கிடைக்கும். தொழிலில் கண்டிப்பாக முன்னேற்றம் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த உயர்வு கண்டிப்பாக அடைய முடியும். அதற்கான உழைப்பு உங்களிடம் இருக்கும். பிடிவாத குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். தேவையில்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம். வழக்கு விவகாரங்களை சரிசெய்து கொள்ளுங்கள். யாருடைய பஞ்சாயத்துகளிலும் அறிவுரை சொல்ல வேண்டாம். சில விஷயங்களை நாசுக்காக புரிந்து கொள்ள வேண்டும். தொழில் வியாபாரத்திற்காக அலைய வேண்டியிருக்கும். எதிர்பார்த்த நிதியுதவி கண்டிப்பாக கிடைக்கும். திட்டமிட்டதைவிட கூடுதல் செலவு இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் சொல் படி நடந்து கொள்ள வேண்டும். நிலுவையில் உள்ள பணம் கண்டிப்பாக வந்து சேரும். பொறுப்பாக இருக்க வேண்டும்.
பழைய பிரச்சினைகள் கண்டிப்பாக சரியாகும். ஓரளவு மன நிம்மதி கிடைக்கும். இன்பமும் துன்பமும் கலந்து காணப்படும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்தாலும் மாலை நேரத்திற்குள் சரியாகும். உங்களை புரிந்துகொள்ளக்கூடிய காலகட்டம் கண்டிப்பாக இருக்கின்றது. காதலில் உள்ளவர்கள் நிதானமாக கையாண்டு காதலை சிறப்பாக வழிநடத்த வேண்டும். கோபத்தினால் சின்ன சின்ன பிரச்சினைகள் எழும். மாணவர்கள் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் தெளிவுபடுத்திக் கொண்டு பின்னர் செய்ய வேண்டும். குழப்பங்கள் இருந்தால் அதனை தீர்த்துக் கொள்ள வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்