Categories
சினிமா தமிழ் சினிமா

இவருடைய கதை இவருக்கா…. பா.ரஞ்சித்தின் அடுத்த திரைப்படம்…. வெளியான தகவல்கள்….!!

பிரபல இயக்குனர் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித் ஆவார். இவர் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே மக்களின் ஆதரவைப் பெற்று பெரிய அளவில் வெற்றியடைந்து வருகின்றது. அந்த வகையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா’ திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியுள்ளது. இதனையடுத்து அவர் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்னும் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கான முதற்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது.

மேலும் அவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம் படத்தை இயக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கான சூட்டிங் வருகிற அக்டோபர் மாதம் தொடங்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்தப்படத்தின் கதை இதற்கு முன்பு நடிகர் விஜய்க்கு அவர் கூறியிருந்த ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தின் கதை என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.

Categories

Tech |