Categories
மாநில செய்திகள்

சென்னையில் தடை, மீறினால் அவ்வளவு தான்…. கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பரவி விடக்கூடாது என்பதில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாடுவதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் விநாயகர் சதுர்த்தியன்று பொதுவெளியில் தடையை மீறி செயல்படுபவர்கள் மீது சட்ட ரீதியான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். மேலும் விநாயகர் சதுர்த்தியன்று அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படும் என்றும் தெரியவித்துள்ளார்.

Categories

Tech |