1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து செப்., 8ஆம் தேதிக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்..
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்ததை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தன.. இதனையடுத்து கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு பாடங்களை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பத்தில் உள்ளனர்.. இந்த நிலையில் திருச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.. அப்போது அவரிடம் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது எப்போது என கேட்கப்பட்டது.. அதற்கு அவர் கூறியதாவது, 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து செப்., 8ஆம் தேதிக்கு பிறகு முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்..