இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை விட கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதிலிருந்தே இன்னும் மீளாத நிலையில், கோழிக்கோட்டில் 12 வயது சிறுவன் ஒருவர் நிபா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்து சிறுவனுடைய குடும்பத்தினருக்கும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் நிபா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
ஆனால் அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. எனவே மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் .இவ்வாறு கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.