நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் சிவசிவா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெய் நடிப்பில் தற்போது குற்றமே குற்றம், எண்ணித்துணிக, சிவசிவா, பிரேக்கிங் நியூஸ் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் சிவசிவா படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாலசரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எல்.என்.டி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பதன் மூலம் நடிகர் ஜெய் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இந்நிலையில் சிவசிவா படத்தின் அதிரடியான டீஸர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.