அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் வினாடிக்கு 4,600 கன அடி நீர் வெளியில் விடப்பட்டது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அங்கு குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டது.
இதனை அறியாமல் வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும் இந்த அணை பகுதியிலுள்ள மீன் கடையை திறப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. எனவே அணையின் வெள்ளப்பெருக்கு குறைந்த பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.