Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காட்டு யானைகளின் அட்டகாசம்…. சேதமான மின் கம்பங்கள்…. இருளில் மூழ்கிய கிராமங்கள்…!!

காட்டு யானைகள் மரத்தை வேரோடு பிடுங்கியதோடு, 2 மின் கம்பங்களை சேதப்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டபுள்கான்தொட்டி கிராமத்தில் சுற்றித்திரியும் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றது. இந்நிலையில் யானைகள் ஒரு பெரிய மரத்தை வேரோடு பிடிங்கி எரிந்ததோடு, அங்கிருந்த 2 மின் கம்பங்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் மின்சாரம் தடைபட்டு 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கி விட்டன.

இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை நட்டு சீரமைத்துள்ளனர். அதன் பிறகே அப்பகுதியில் மின் விநியோகம் சீரானது. இதனைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |