Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீடுகளுக்குள் வரும் கழிவு நீர்…. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நல்லதம்பி செட்டி தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி சரியாக செய்து கொடுக்காததால் மழை நீருடன் சாக்கடை கழிவு நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் அப்பகுதி முழுவதும் சேரும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. கடந்த 4 நாட்களாக அப்பகுதியில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

இதனையடுத்து சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |