அரசு பேருந்து மோதி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள குறவன்குப்பத்தில் கருணாமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்.எல்.சி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வடலூருக்கு சென்று விட்டு வந்து கொண்டிருக்கும் போது அரசு பேருந்து ஒன்று எதிர்பாராவிதமாக கருணாமூர்த்தி மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கருணாமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்களால் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கருணாமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.