பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆர்.என்.புதூரில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகின்றார். அதே பகுதியில் கனிமொழி என்பவரும் வசித்து வருகின்றார். இவர்கள் 2 பேரும் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 8 வருடங்களாக 2 பேரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் 2 பேரும் வீட்டை விட்டு சென்று கொடுமுடியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து அவர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதன்பின் 2 பேரின் பெற்றோர்களையும் காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஆனால் பெற்றோர்கள் வராத காரணத்தினால் 2 பேரையும் ஞானசேகரின் உறவினர்களுடன் காவல்துறையினர் அனுப்பிவைத்தனர்.