டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா இன்று மாலை தொடங்குகிறது .
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் இன்றுடன் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு பாரா ஒலிம்பிக் நிறைவு விழா நடைபெறுகிறது.
இந்நிலையில் நிறைவு விழாவில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கங்களை வென்ற இளம் வீராங்கனை அவனி லெகாரா இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் கௌரவத்தைப் பெற்றுள்ளார் .இன்று நடைபெறும் நிறைவு விழாவில் மொத்தம் 11 பேர் கொண்ட இந்திய குழு பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.