குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பகுதியில் இருக்கும் ஒரு குடோனில் சினிமா படப்பிடிப்புக்கு அரங்கம் அமைக்க தேவைப்படும் அலங்காரப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த அனைத்து அலங்கார பொருட்களும் எரிந்து பல அடி உயரத்திற்கு கரும் புகை மூட்டம் எழுந்துள்ளது.
மேலும் இந்த தீ விபத்தில் இருக்கும் மரங்கள் எரிந்து நாசமாகி விட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.