கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பாக டீசல், பெட்ரோல், கேஸ் விலைகளின் உயர்வை கண்டித்து மற்றும் மத்திய அரசை கண்டித்தும் மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளரான பரமசிவம் தலைமை தாங்கியுள்ளார்.
இதில் கனகராஜ், சாமிதுரை, வசந்த், தமிழ்மணி, சிலம்பரசன், ரமேஷ் மற்றும் முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனை அடுத்து வட்ட செயலாளரான பரமசிவம் தலைமையில் நெற்றியில் திருநீர் பட்டை போட்டு சங்கு ஊதி கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.