Categories
உலக செய்திகள்

புதிய ஆட்சி எப்போது….? அடுத்த வாரம் ஒத்திவைப்பு…. தகவல் வெளியிட்ட தலீபான்கள் செய்தி தொடர்பாளர்….!!

ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சி அமைக்கும் திட்டமானது அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளதாக தலீபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் முழுவதுமாக சென்றது. இதனையடுத்து காபூல் விமான நிலையத்தில் முகாமிட்டு இருந்த அமெரிக்கா படைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முழுவதுமாக வெளியேறினர். மேலும் அமெரிக்கா படைகளின் வெளியேற்றத்தை கொண்டாடிய தலீபான்கள் ஆப்கானில் புதிய ஆட்சி முறையை அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அதிலும் தலீபான்களின் மூத்த தலைவரான முல்லா அப்துல் கனி பரதர் தலைமையில் கடந்த சனிக்கிழமையன்று புதிய ஆட்சி அமலுக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியானது. இதற்கிடையில் பஞ்ச்ஷிர் மாகாணம்  மட்டும் தலீபான்களின்  கட்டுக்குள் வராமல் இருப்பதனால் புதிய ஆட்சி அமைக்கும் முடிவை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.

இதனை தலீபான்களின் செய்தி தொடர்பாளரான ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். குறிப்பாக அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசை ஏற்படுத்துவதற்காக பல்வேறு கட்சிகள், இனக்குழுவுடன்  பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் தாமதமாகியுள்ளது என்று கூறப்படுகிறது.  இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள கூடிய பரந்த கூட்டமைப்பை உருவாக்கும் பொருட்டு தலீபான்களின் அமைப்பு பஞ்ச்ஷிர் மாகாணத்துடன் போராடி வருகின்றனர். இதனால் புதிய ஆட்சி அமைக்கும் முடிவானது அடுத்த வாரத்திற்கு  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே புதிய ஆட்சியின் நிர்வாகத்தில் பெண்கள் இருக்கக்கூடாது என்று தலீபான்கள் கூறி வருகின்றனர். இதற்காக ஆப்கானிஸ்தானில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |