தென்னாப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடைலனா 2-வது ஒருநாள் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது .
தென்னாப்பிரிக்கா -இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 47 ஓவராக குறைக்கப்பட்டது .இதன்படி முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி 47 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் குவித்தது. இதில் தொடக்க வீரரான ஜேன்மன் மலான் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். இதையடுத்து ஹென்ரிக்ஸ் 51 ரன்னும், கிளாசென் 43 ரன்னும் குவித்தனர் . இலங்கை தரப்பில் சமீரா மற்றும் கருணரத்னே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர் .
ஆனால் ஆட்டத்தின் போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 41 ஓவரில் 265 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடியது. ஆனால் 36.4 ஓவரிலேயே அனைத்து விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்து இலங்கை அணி தோல்வி அடைந்தது .தென்னாப்பிரிக்கா தரப்பில் ஷம்சி 5 விக்கெட்டும், ரபடா 2 விக்கெட்டும் கைப்பற்றினர் . இதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.