Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“புதிதாக தொடங்கப்பட்ட சட்ட நூலகம்” திறந்து வைத்த நீதிபதி…. அதிகாரிகளுடன் ஆலோசனை….!!

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மரக்கன்றுகளை நட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

சேலம் மாவட்டத்திற்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்துள்ளார். இதனையடுத்து சென்னையிலிருந்து சேலத்திற்கு காரில் வந்த இவரை முதன்மை நீதிபதியான குமரகுரு வரவேற்றார் . இதேபோன்று மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா போன்றோர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை வரவேற்றுள்ளனர். அதன்பின் சங்ககிரிக்கு சென்ற அவர், அங்கு நீதிமன்ற வளாகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சட்ட நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளார்.

அந்த விழாவில் சங்ககிரி சார்பு நீதிபதியான உமாமகேஸ்வரி தலைமையில், நீதிபதி ராதாகிருஷ்ணன், சுந்தரராஜன் போன்றோர் கலந்துகொண்டு முன்னிலை வகித்துள்ளனர். இதற்கு முன்பாக குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் கலந்தாய்வு கூட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பங்கேற்று நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுள்ளார். மேலும் இந்த விழாவில் சங்ககிரி உதவி கலெக்டர் வேடியப்பன், தாசில்தார் பானுமதி, வக்கீல் சங்க தலைவர் மோகன் பிரபு, வக்கீல்கள் சண்முகசுந்தரம், கிறிஸ்டோபர், ராமசாமி மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

இந்த சட்ட நூலகத்திற்கு 2 ஆயிரத்து 500 சட்ட புத்தகங்கள் இருக்கின்றது. இதில் 1921-ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரையிலான குற்றவியல், உரிமையியல் சட்ட நூல்கள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நீதிபதிகளுடன் ஆலோசனை செய்தனர். அப்போது சேலம் மாவட்டத்தில் நிலுவை வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து நீதிபதிகளுடன் ஐகோர்ட்டு  தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி ஆலோசனை செய்தார்.

Categories

Tech |