காற்றுடன் பெய்த கனமழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருமக்கோட்டையில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் காற்றுடன் கனமழை நீடித்ததால் கடைவீதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வயல்களில் மழைநீர் குளம்போல் தேங்கி காணப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதேபோன்று கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், தண்ணீர்குன்னம், ஓவர்ச்சேரி, குடிதாங்கிச்சேரி, குலமாணிக்கம், ராமநாதபுரம், வேளுக்குடி, நாகங்குடி, பண்டுதக்குடி பழையனூர்,சித்தனங்குடி, திருராமேஸ்வரம், கோரையாறு, விழல்கோட்டகம், அதங்குடி, வெள்ளைக்குடி, வாளச்சேரி, மரக்கடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளிலும், வயல்களிலும் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இந்த மழையினால் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.