Categories
உலக செய்திகள்

பிரிவினைவாத தலைவர் மறைவு…. போர்த்தப்பட்ட தேசியக்கொடி…. வழக்கு பதிவு செய்த காவல்துறை….!!

பிரிவினைவாத தலைவரின் உடலுக்கு இறுதிச்சடங்கில் தேசியக்கொடி போர்த்தப்பட்டதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான சையது அலி ஷா கிலானி உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். இதனையடுத்து அவரது உடலுக்கு பாகிஸ்தான் தேசியக் கொடி போர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். அதில் “பிரிவினைவாத தலைவரான சையத் அலி ஷா கிலானி வெகு நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து கடந்த புதன்கிழமை அன்று அவர் காலமானார். இதனை தொடர்ந்து ஸ்ரீநகர் புகர்ப் பகுதியில் இருக்கும் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள மசூதியில் வியாழக்கிழமை அன்று கிலானியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாக அவரின் உடலில் பாகிஸ்தான் தேசியக் கொடியை போர்த்தியுள்ளனர்.

இந்த செயலானது காணொளியாக காவல்துறைக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றுவதற்காக காவல் துறையினர் அங்கு சென்று உள்ளனர். ஆனால் அதற்குள் அவரது உடலில் போர்த்திருந்த கொடியை கிலானியின் ஆதரவாளர்கள் அகற்றியுள்ளனர். மேலும் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட சிலர் இந்தியாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளனர். ஆகவே  தேசியக்கொடியை போர்த்தியதற்காகவும் , இந்தியாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதற்காகவும் அவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. குறிப்பாக இந்தியா தண்டனை சட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |