கனடா நாட்டிலுள்ள மாவட்டம் ஒன்று கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்து தடுப்பூசியை செலுத்தும் பணியினை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
இருப்பினும் அனைத்து நாடுகளிலும் சில நபர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கு தயங்கி வருகிறார்கள். அந்த தயக்கத்தை போக்குவதற்கு சில இடங்களில் பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கனடா நாட்டிலுள்ள ஆல்பர்ட் மாவட்டம் கொரோனா குறித்த தடுப்பூசியினை செலுத்திக் கொள்பவர்களுக்கு சுமார் 100 டாலர்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற அதிரடியான அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. மேலும் இந்த திட்டம் செப்டம்பர் 13 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 14-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.