சுவிட்சர்லாந்தில் கொரோனா குறித்த தடுப்பூசியை குறைவான சதவீத நபர்கள் மட்டுமே செலுத்தியுள்ள நிலையில் அந்நாட்டிலுள்ள பொதுமக்களில் 34.8 சதவீதம் பேர் கொரோனா தொற்றின் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்திலுள்ள மொத்த தீவிர சிகிச்சை பிரிவில் கிட்டத்தட்ட 81 சதவீத நோயாளிகள் உள்ளார்கள். இதில் சரிபாதி அளவு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்கள். இதற்கு மிகவும் முக்கிய காரணமாக ஸ்விட்சர்லாந்தில் கொரோனா குறித்த தடுப்பூசியை குறைவான சதவீத நபர்கள் மட்டுமே எடுத்துக் கொண்டதுதான் என்று கருதப்படுகிறது.
இதனையடுத்து சுவிட்சர்லாந்திலுள்ள மொத்த மக்கள் தொகையில் 34.8 சதவீத நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதனைத்தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகளை விட சுவிட்சர்லாந்து நாட்டில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.