Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : ”சம்பளத்துடன் பொதுவிடுமுறை” அரசானை வெளியீடு ….!!

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்.21 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் திமுக போட்டியிடுகின்றது. ஏனைய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகின்றது.அதே போல ஆளும் கட்சியான அ.தி.மு.க சார்பில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில்  ரெட்டியார்பட்டி வி.நாராயணனும்,

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில்  எம்.ஆர். முத்தமிழ் செல்வனும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர். திமுக சார்பில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நா.புகழேந்தியும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ரூபி மனோகரனும் நிறுத்தப்பட்டுள்ளனர். இன்னும் 3 நாள் கழித்து வாக்குப்பதிவு என்பதால் பிரச்சாரம் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.இந்நிலையில் தேர்தல் நடைபெறும் நாங்குநேரி விக்கிரவாண்டியில் 21ம் தேதி அனைவரும் வாக்களிக்கும் வகையில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21_ஆம் தேதி அரசு , தனியார் அலுவலக பணியாளர்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டுமென்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |