Categories
உலக செய்திகள்

தலிபான்களின் வசம் வந்ததா பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கு…? வீடியோ வெளியிட்ட துணை அதிபர்….!!

ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கை தாங்கள் கைப்பற்றியதாக வெளியிட்டுள்ள தகவலை அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே மறுத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

ஆட்களை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வராத மற்றும் ஆப்கானிஸ்தானின் தலை நகரின் நுழைவு வாயிலாக திகழும் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் ஆப்கனில் துணை அதிபர் அம்ருல்லா தலிபான்களுக்கு எதிராக கிளர்ச்சிப் படை ஒன்றை உருவாக்கியுள்ளார்.

மேலும் பள்ளத்தாக்கிலுள்ள கிளர்ச்சி படையினருக்கும், தலிபான்களுக்குமிடையே தற்போது மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் தலிபான்கள் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கு தங்கள் வசம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள். ஆனால் இதனை ஆப்கனில் துணை அதிபரான அம்ருல்லா மறுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |