இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 1992-ஆம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். தற்போது இவர் பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் இவர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் பாலிவுட் படத்திற்கும் இசையமைத்து வருவதாக கூறப்படுகிறது.
https://www.instagram.com/p/CTbm98iFHDr/?utm_source=ig_embed&ig_rid=2db6d880-a527-4b21-8cf9-ec45cbe75096
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஜூம் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் மீசையுடன் இருக்கும் இந்த புகைப்படத்திற்கு இலட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது.