Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சட்டவிரோத செயல்” வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் டிராக்டர் டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கருவேலங்குளம் பகுதியில் வசிக்கும் சக்திவேல்  மற்றும் செல்வின் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்ததோடு அவர்கள் கடத்தி வந்த 2 யூனிட் சரள் மண் மற்றும் டிராக்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதனைப் போன்று கங்கைகொண்டான் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெங்கடாசலபுரம்பட்டி பகுதியில் உள்ள சிற்றாற்றில் மாட்டு வண்டி மூலம் சட்ட விரோதமாக ஒருவர் மணல் அள்ளி கொண்டு இருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் வெங்கடாசலம்பட்டி பகுதியில் வசிக்கும் ராமர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ராமரை  கைது செய்ததோடு அவரிடம் இருந்து மணல் மற்றும் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |