அரசு பெண் ஊழியரிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் சுப்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இவர் நாகர்கோவிலில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தேவியும் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணும் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் ரயில்வே மேம்பாலம் அருகில் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தேவியின் கழுத்தில் கிடந்த கவரிங் நகையை தங்கம் என நினைத்து பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தேவி நெல்லை டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.