Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரொம்ப டார்ச்சர் பண்றாங்க…. பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

வரதட்சணை கேட்டு பெண்ணை மிரட்டியதாக 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கம்மாப்பட்டி பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருக்கிறார். கடந்த 2011 – ஆம் ஆண்டில் பிரியாவிற்கும் நெய்வேலி பகுதியில் வசிக்கும் கணேஷ் என்பவரின் மகனான பிரவீன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இதனை அடுத்து திருமணத்தின்போது பிரியாவிற்கு 29 பவுன் தங்க நகையும், 2 லட்சம் ரூபாய் பணம் ரொக்கமாகவும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டுக் குடும்பமாக இருந்த போது பிரவீன் 29 பவுன் நகையையும் பிரியாவிடமிருந்து வாங்கியுள்ளார்.

தற்போது இன்னும் கூடுதலாக வரதட்சணை கேட்டு பிரவீன் பிரியாவை கொடுமை படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரியா மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று பிரவீன் மற்றும் அவரது குடும்பத்தின் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் பிரவீன், கணேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |