Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானின் எல்லையில்…. தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்…. 3 ராணுவ வீரர்கள் பலி….!!

ஆப்கானிஸ்தானின் எல்லை பகுதியில் தீவிரவாதிகள் தற்கொலை வெடிகுண்டு வீசி நடத்திய தாக்குதலில் 3 பாகிஸ்தான் துணை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் எல்லைக்கு அருகில் மியான் குந்தி என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் வழக்கம்போல் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தென்மேற்கு பாகிஸ்தானுக்கு தற்கொலை படை தீவிரவாதிகள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த ராணுவ வீரர்களை குறிவைத்து தற்கொலை வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் அந்த இடத்தில் ஹசாரா ஷியா பிரிவை சேர்ந்த வியாபாரிகள் காய்கறிகளை விற்று வருகின்றனர்.

இதனையடுத்து தீவிரவாதிகளின் இந்த தாக்குதலில் பாகிஸ்தான் துணை ராணுவ வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாகவும் பொதுமக்கள் 20 பேர் படுகாயமடைந்ததாகவும் காவல்துறை அதிகாரி அசார் அக்ரம் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த செய்தியை காவல்துறை பயங்கரவாத எதிர்ப்பு படையின் செய்தி தொடர்பாளர் உறுதிபடுத்தியுள்ளார். அதன்பின் பலுசிஸ்தானில் தீவிர சன்னி இஸ்லாமிய குழுவினரால் ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் மட்டுமே அடிக்கடி குறிவைக்கப்படுகிறார்கள். இதுபோன்ற தீவிரவாதிகளின் தாக்குதல் பலுசிஸ்தானில் நடப்பது ஒரு தொடர் கதையாகும்.

Categories

Tech |