Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

என் மாட்டை காணம்…. வசமாக சிக்கிய வாலிபர்….. போலீஸ் நடவடிக்கை….!!

மாடுகளைத் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெருகடப்புத்தூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 3 பசுமாடுகளும், 1 கன்றுக்குட்டியும் இருக்கின்றது. இவர் வீட்டின் பின்புறமுள்ள கொள்ளை பக்கத்தில் மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். கடந்த செப்டம்பர் 2 -ஆம் தேதியன்று மர்ம நபர்கள் பசு மாட்டையும், கன்றையும் திருடி சென்றனர். இது குறித்து பெருமாள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்துள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த மினி வேனை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த மினி வேன் டிரைவரான அஜித் என்பவர் காவல்துறையினரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் அஜித்தை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அஜித் என்பவர்தான் 3 மாடுகளையும், 1 கன்று குட்டியையும் திருடியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பிறகு அஜித்திடம் இருந்த மாடுகளையும், கன்றுகளையும் மீட்ட காவல்துறையினர் உரிமையாளரான பெருமாளிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஜித்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |