இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருடிய 2 – பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அதன்பிறகு துரைசாமிபுரம் பகுதியில் வசிக்கும் அருண்குமார் மற்றும் சுந்தர்ராஜ் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து விசாரணையின் போது சுந்தர்ராஜ் மற்றும் அருண்குமார் திருட்டில் ஈடுபட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் இவரிடமிருந்த செல்போன் மற்றும் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததோடு கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.