கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யு. சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. சங்கத்தினர் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் பாலன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கியாஸ் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கியாஸ் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனால் சி.ஐ.டி.யு. சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது சமையல் கியாஸ் சிலிண்டரை பாடையில் தூக்கி கொண்டும், அதன் பிறகு விறகு அடுப்பை பற்ற வைத்து சமையல் செய்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் உன்னிகிருஷ்ணன், செயலாளர் ரங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.