Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! செலவுகள் அதிகரிக்கும்….! குழப்பம் ஏற்படும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம்.

இன்று குடும்பத்தாரின் ஆசைகளால் வீட்டுச் செலவுகள் அதிகமாக ஏற்படும். குடும்பத்திற்கு என்ன வேண்டுமோ அதனை மட்டும் வாங்கிக் கொடுக்க வேண்டும். தேவை இல்லாத பொருட்கள் மீது முதலீடு செய்த பணத்தை விரயமாக்க வேண்டாம். எவ்வளவு உழைத்தாலும் ஆதாயம் இருக்காது. எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் வீட்டிற்கு பணம் போய்ச் சேராது. உங்களுடைய நல்ல மனதிற்கு எல்லாம் நல்லவிதமாக நடக்கும். ஆனால் கொஞ்சம் காலதாமதம் ஆகும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்களுடைய திட்டங்கள் இருக்கட்டும். உங்களுடைய பணிகளில் கவனமாக இருப்பது நல்லது. பதவி உயர்வு கிடைக்கும். நல்ல சம்பளம் கிடைக்கும். எல்லா வகையிலும் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். அதனால் பொருத்துக் கொண்டு எதையும் செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள பணம் வருவதற்கு தாமதப்பட்டாலும் கண்டிப்பாக வந்து சேர்ந்துவிடும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம்.

கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கிவிடும். உறவுகளிடம் நிதானமாக பழகவேண்டும். உயர்ந்த எண்ணங்கள் இருக்கும். உயர்வான சிந்தனை இருக்கும். வியாபாரம் ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். காதலில் சின்னதாக பிரச்சனைகள் இருந்தாலும் சரி செய்து கொள்ள வேண்டும். காதலில் வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மனதை தைரியப்படுத்தி உறுதியாக எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு எதிர்கால திட்டங்கள் இருக்கும். மாணவர்கள் கல்வியில் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 6                                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |