Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா….? கேள்வி எழுப்பிய ரசிகர்…. உறுதி செய்த பிரபல பிக்பாஸ் பிரபலம்….!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமான ஷிவானி தற்போது ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் எல்லா சீரியல்களுமே மக்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகின்றது. மேலும் அதில் ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு சீரியலுக்கும் ரசிகர்கள் பட்டாளம் பெருமளவில் உள்ளது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘பகல் நிலவு’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமான ஷிவானி நாராயணன் இதனைத்தொடர்ந்து ‘கடைக்குட்டி சிங்கம்’ மற்றும்  ‘இரட்டை ரோஜா’ ஆகிய  சீரியல்களிலும் கதாநாயகியாக நடித்து தனது திறமையை வெளிபடுத்தியுள்ளார்.

அதன்பின் இவர் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ளார். இதனையடுத்து இவர் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகின்றார். இந்நிலையில் நடிகை ஷிவானி ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து அவருக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷிவானியின் இன்ஸ்டாகிராம் பதிவு

இதுக்குறித்து எந்த  தகவலையும் வெளியிடாமல் இருந்த நடிகை ஷிவானி நாராயணன் தற்போது முதன்முறையாக ஒரு புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது இணையத்தில் ஷிவானியுடன் பேசிய அவரது ரசிகர் ஒருவர் ‘நீங்கள் விக்ரம் படத்தில் நடிக்கிறீர்களா?’ என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதில் கூறும் விதமாக அவர் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தின் மூலம் அவர் ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |