Categories
சினிமா தமிழ் சினிமா

பிபி ஜோடி நிகழ்ச்சியில்…. கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்றவர்கள்…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!

விஜய் தொலைக்காட்சியின் ‘பிபி ஜோடி’ என்னும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற அனிதா மற்றும் ஷாரிக் நேரடி finalist ஆக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் எல்லா நிகழ்ச்சிகளுமே ரசிகர்களின் ஆதரவை பெற்று பெருமளவில் வெற்றிகரமாக ஓடி வருகின்றது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் ‘பிக்பாஸ்’ ஆகும். மேலும் இந்த நிகழ்ச்சியின் நான்கு  சீசனுமே ரசிகர்களின் பேராதரவைப் பெற்று மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இதனையடுத்து ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து நான்காவது சீசன் வரை பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களையும் வைத்து ‘பிபி ஜோடிகள்’ என்னும் மற்றொரு நடன நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

அதன்பின் இந்த நிகழ்ச்சியும் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகின்றது. இந்த நிகழ்ச்சியிலும் பிக்பாஸை போலவே கோல்டன் டிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் ஜோடிகள் நேரடியாக finalist ஆக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அனிதா மற்றும் ஷாரிக் ‘பிபி ஜோடி’ நிகழ்ச்சியில் தனது நடன திறமையை வெளிப்படுத்தி அந்த கோல்டன் டிக்கெட்டை வென்று நேரடி finalist ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர்களுடைய ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |