கோயில்களை திறக்க வேண்டுமென்று போராட்டம் நடத்துவதற்கு பதிலாக கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மராட்டிய மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது: கோவில்களை திறக்க வேண்டும் என்று கூறி பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு பதிலாக கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள். கோவில் உள்ளிட்டவற்றை திறக்க கோரி போராட்டம் நடத்த வேண்டாம். டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் தற்போது பரவி வருகின்றது.
இந்த நேரத்தில் நோயாளிகள் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சிலர் நிறுவனங்களை திறக்கக்கோரி அவசர படுத்துகின்றனர். ஆனால் சிறிது காலம் அவர்களை காத்திருக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் நிறுவனங்கள் திறக்கப்பட்டால் நிலைமை மிக மோசமாகிவிடும். பிறகு மீண்டும் நிறுவனங்கள் மூட வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும். எனவே அனைவரும் பொறுமையாக காத்திருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.