தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 13-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
14ஆம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.