இயக்குனர் முத்தையா நடிகர் கார்த்தியை வைத்து அடுத்தாதாக உருவாக்க இருக்கும் திரைப்படத்திற்கு ‘விருமன்’ என டைட்டில் வைத்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் கார்த்தி தற்போது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு இயக்குனர் முத்தையா இயக்க இருக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் முத்தையா இயக்க இருக்கின்ற திரைப்படத்தை நடிகர் கார்த்தியின் அண்ணன் மற்றும் முன்னணி நடிகருமான சூர்யாவின் 2d entertainment நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது. தற்போது இதற்க்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை நடிகர் சூர்யா போஸ்டருடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அந்த திரைப்படத்திற்கு ‘விருமன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கார்த்தி-முத்தையா காம்போவில் வெளியான படம் ‘கொம்பன்’ என்பது குறிப்பிடத்தக்கது.