தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் ஊரடங்கு கடுமையாக பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பாதிப்பு படிப் படியாக தற்போது குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடி வருகின்றனர்.
இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இந்நிலையில் இன்று அமாவாசையை ஒட்டி ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு தடுப்பு வேலி அமைத்து உள்ளனர். நாளை முதல் அக்னி தீர்த்தத்தில் நீராடி கோயிலுக்கு செல்லலாம் எனவும், தனுஷோடிக்கு சுற்றுலா செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.