Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர ரோந்து பணி…. விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

கொரோனா விதிமுறைகளை மீறிய தனியார் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கொரோனா விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்கிறார்களா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனை அடுத்து எஸ்.என்.புரம் பகுதியில் 3 தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்கள் முகக் கவசம் அணியாமல் பணியில் ஈடுபட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் 3 தனியார் நிறுவனங்களுக்கும் தலா 5000 ரூபாய் பணம் அபராதம் விதித்துள்ளனர். மேலும் இந்த ஆய்வின் போது நகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் என பலரும் உடன் இருந்துள்ளனர்.

Categories

Tech |