திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் வெளியூரில் வசிக்கும் மாணவர்கள் பலரும் விடுதியில் தங்கி வசித்து வருகின்றனர். தற்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வகுப்புகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர்களின் விடுதிக்கு அருகே சிறுத்தை ஒன்று அந்த பக்கமாக வந்துள்ளது. இதைப் பார்த்த மாணவர்கள் பயந்து விடுதிக்குள் ஓடிச் சென்று அறையை பூட்டிக் கொண்டனர்.
சிலர் பைக்குகளின் ஒலியை எழுப்பினார்கள். இந்த சத்தம் கேட்டு சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இந்த பல்கலைக்கழகம் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த சில மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் அடிக்கடி சிறுத்தைகள் அப்பகுதி வழியாக வலம் வந்து கொண்டு இருக்கின்றது. இதனால் கல்லூரியை சுற்றி இரும்பு வேலி அமைக்க வேண்டும் என்று மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.